இண்டிகோ விமானத்தில் பொழுதுபோக்கு சேவை. விமான பயணிகளை குஷிப்படுத்த அறிமுகம்
டெல்லி- கோவா இடையிலான விமான சேவையில், விமானத்தில் பயணிகளுக்காக இன்ஃபிளைட் பொழுதுபோக்கு சேவையின் சோதனையை நடத்தப்போவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.இண்டிகோ நிறுவனம் தனது ஆப்மூலம் இந்தப் பொழுதுபோக்கு சேவையை சோதனை செய்ய உள்ளது. மே1 ஆம் தேதியிலிருந்து முதன்முறையாக அதன் வாடிக்கையாளர்களுக்காக இந்த பொழுதுபோக்கை இண்டிகோ விமான நிறுவனம் அளிக்கிறது.
மூன்று மாதம் நடைபெறும் இந்த பரிசோதனையின்போது பயணிகள் இண்டிகோ ஆப்பின் மூலம் கன்டன்ட்களை கண்டு களிக்கலாம். விமானம் உச்சபட்ச உயரத்தை அடைந்தவுடன் இந்த சேவை தொடங்கும். இதன்மூலம் விமானத்தின் எலக்ட்ரானிக்ஸ் இன்டர்பேஸ் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். பயணிகள் தங்களது சொந்த ஹெட்போன்கள் மூலம் கன்டன்ட்களை கேட்கலாம். இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தால் பயணிகளின் பயணம் இனிதாக அமைய முழு அளவில் பொழுதுபோக்கு சேவையை அளிக்கும். 350 விமானங்கள் தினமும்2000 சேவைகளுடன் இண்டிகோ தனது வாடிக்கையாளர்கள் பயணம் திருப்திகரமாக இருக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
டெல்லி- கோவா தடத்தில் அறிமுகப்படுத்தப்படும் இந்த சேவை இண்டிகோ நெட்வொர்க்கின் பரந்த சேவையை மேம்படுத்தும் எனக் கூறப்படுகிறது.. விமானநிலைய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் விரிவாக்கம், விமானப் பயணத்துக்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது.விமானப் பயணம் பற்றிய அரசின் பார்வை மாறியுள்ளது. பணக்காரர்களுக்கே ஆன சேவை என்ற மனப்போக்கு மாறிவிட்டது. நாட்டின் இன்ப்ராஸ்ட்ரக்சரின் முக்கிய அங்கமாக இப்போது விமானப் போக்குவரத்து பார்க்கப்படுகிறது. இதனால் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
0
Leave a Reply